புதன், 4 நவம்பர், 2015
For TB /கபம் ,காசம் ,இருமல் தீர
கபம் ,காசம் ,இருமல் தீர :
இறைஅருளை வேண்டிக்கொண்டு இறை மூலிகையான இவற்றை உபயோகிக்கவும்.
வேப்பிலை யத்திஇலை வில்வஇலை நுண்தூளே
காப்புடல் ஆருயிர் நோய் மாற்று .
விளக்கம் ;
உடலை வருத்தி,வாட்டி எடுக்கும் காச நோய் குணமாக ,சம அளவு வேப்பிலை ,அத்தி இலை , வில்வ இலை எடுத்து நிழலில் காய வைத்து
பொடியக செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை,மாலையில் அரை டம்ளர் நல்ல வெந்நீரில் உண்டு வர கடுமையான கபம்,காசம்.இருமல் நோய் தீரும் .
வியாழன், 24 செப்டம்பர், 2015
Heart Attack preventionஇருதயம் வலுப்பெற :மாரடைப்பை தவிர்க்க
Heart Attack Prevention
இருதயம் வலுப்பெற :மாரடைப்பை தவிர்க்க
செம்பரத்தம் பூமிச்சைச் சாருதேன் நீர்ப்பாகு
நம்பிக்கை நல்லிதயச் சத்து . ......குறள்
விளக்கம் :
செம்பரத்தம் பூ 300 ,எலுமிச்சம்பழம் 60 எடுத்து சாறு பிழிந்து அதில் செம்பருத்தி பூவை கசக்கி போட்டு 24 மணி நேரம் ஊற வைத்து சாற்றை வடிகட்டி ,சாறு அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலக்கி பதமுறகாய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும் .
தினமும் காலை ,மாலை 2 தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் அருந்திவர இருதயம் வலுபெறும் ,மாரடைப்பு வராது.
இருதயம் வலுப்பெற :மாரடைப்பை தவிர்க்க
செம்பரத்தம் பூமிச்சைச் சாருதேன் நீர்ப்பாகு
நம்பிக்கை நல்லிதயச் சத்து . ......குறள்
விளக்கம் :
செம்பரத்தம் பூ 300 ,எலுமிச்சம்பழம் 60 எடுத்து சாறு பிழிந்து அதில் செம்பருத்தி பூவை கசக்கி போட்டு 24 மணி நேரம் ஊற வைத்து சாற்றை வடிகட்டி ,சாறு அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலக்கி பதமுறகாய்ச்சி இறக்கி வைத்துக்கொள்ளவும் .
தினமும் காலை ,மாலை 2 தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் அருந்திவர இருதயம் வலுபெறும் ,மாரடைப்பு வராது.
வெள்ளி, 24 ஜூலை, 2015
வாழ்வில் இன்பம் அடைய
வாழ்வில் இன்பம் அடைய
மேலா யினும் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க் கும் உபதேசித்தஎன் னாண்டவனே ...
--------------------------முருகர் அந்தாதி ------------------------------
முருகனிடம் உபதேசம் பெற்றவர்கள் மூவர்
தேவ தேவன் --சிவபெருமான்
முனிசிரேஷ்டர் ---அகத்தியர்
நரசிரேஷ்டர் ------ அருணகிரிநாதர்
நக்கீரர்,கபிலர் ,இடைக்காடர் ,பொய்யாமொழி புலவர்,ஔவை யார் ,சிகண்டி ,சிதம்பர ஸ்வாமிகள்,கச்சியப்பர் ,வசிட்டர் இவர்கள் முருகனின் அருள் பெற்றவர்கள் .
இராமயணத்தில் வரும் குகன் ராம பக்தன் ,இறுதியில் திருவடி பேறு அடைந்தது முருகனிடம் தான் .
உயிர் இந்த உடம்பில் இருக்கும் போதே இறைவனை வணங்கி பயனுடைய வேலைகளை செய்து வந்தால் ஆத்மா உடலை விட்டு நீங்கினாலும் கவலை பட வேண்டியதில்லை .தவம் செய்து இறைவழிபாட்டில் இருந்த உயிர் இறைவனை சென்றடையும் .இதுதான் பரமசுகம் .இதை பெற இப்போதே
முருகனை சேவித்து வணங்கி பயன் பெருக.
வேண்டத் தக்கது அறிவோய் நீ ,வேண்டமுழுதும் தருவோய் நீ
என்ற மணிவாசகரின் கூற்றுப்படி
குழந்தைக்கு வேண்டியதை தாய் தருவதை போல் ,நமக்கு வேண்டியதை இறைவன் தருவான் .
நிஷ்காமிய வழிபாடு தான் சிறந்தது .பலனை எதிர் பார்க்காமல் ஆண்டவனை வணங்க வேண்டும் .
வியாழன், 23 ஜூலை, 2015
for Pimples முகப்பரு மறைய
PIMPLES
முகப்பரு மறைய :
1.
முகத்திற் பருக்கள் முழுவதும் மறைய வேண்டுமானால்
புனுகு பூசுவதினால் மறையும் .
2.
துத்தி இலையை பாலில் அரைத்து பற்றாக இட்டால் பருக்கள் மறையும்
3. பொட்டுக்கடலை மாவும் , ஆவாரம்பூ தூளும் நீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட முகம் பருக்கள் இன்றி பொலிவாகும் .
வெள்ளி, 17 ஜூலை, 2015
ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள் :
ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள் :
பலன்: அனைத்து வகையான செல்வங்களும் கிட்டும் ,மிகுந்த பலன் பெற வெள்ளி கிழமை அவசியம் படிக்க வேண்டிய து.
ஓம் ஹிரண்ய நமோ நம :
ஓம் ஹிரிண்யை நமோ நம :
ஓம் ஸ்வர்ணஸ் ரஜே நமோ நம :
ஓம் ரஜதரஜ நமோ நம :
ஓம் சந்த்ராயை நமோ நம :
ஓம் ஹிரண மய்யை நமோ நம :
ஓம் லக்ஷ்ம்யை நமோ நம :
ஓம் அநப காமின்யை நமோ நம :
ஓம் அஷ்வ பூர்வாயை நமோ நம :
ஓம் ரத மத்யாயை நமோ நம :-----------------------------------10
ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதின்யை நமோ நம :
ஓம் ஸ்ரீயை நமோ நம :
ஓம் மாயை நமோ நம :
ஓம் தேவ்யை நமோ நம :
ஓம் காயாயை நமோ நம :
ஓம் ஷோஸ்மிதாயை நமோ நம :
ஓம் ஹிரண்யப் பிரகாராயை நமோ நம :
ஓம் ஆர்த்ராயை நமோ நம :
ஓம் ஜ்வலந்த்யை நமோ நம :
ஓம் த்ருப்தாயை நமோ நம :-----------------------------------20
ஓம் தர்ப பயந்த்யை நமோ நம :
ஓம் பத்ம வர்ணாயை நமோ நம :
ஓம் பத்மே ஸ்திதாயை நமோ நம :
ஓம் சந்திராயை நமோ நம :
ஓம் ப்ரபாஸாயை நமோ நம :
ஓம் யஸஸாயை நமோ நம :
ஓம் ஜ்வலந்தி யை நமோ நம :
ஓம் தேவஜீஷ்டாயை நமோ நம :
ஓம் உதாராயை நமோ நம :
ஓம் தாயை நமோ நம : ---------------------------------------30
ஓம் பத்ம நேம்பை நமோ நம :
ஓம் ஆதித்ய வர்ணாயை நமோ நம:
ஓம் கீர்த்யை நமோ நம :
ஓம் ருத்தியை நமோ நம :
ஓம் கந்தத் வாராயை நமோ நம :
ஓம் துராதர்ஷாயை நமோ நம :
ஓம் நித்ய புஷ்டாயை நமோ நம :
ஓம் கரீஷிண்யை நமோ நம :
ஓம் ஈஸ்வர்யை நமோ நம :
ஓம் மநஸ காமாயை நமோ நம :------------------40
ஓம் வாச ஆகூத்யை நமோ நம :
ஓம் ஸத்யாயை நமோ நம :
ஓம் பசூநாம் ரூபாயை நமோ நம :
ஓம் அந்நஸ்ய யஸஸே நமோ நம :
ஓம் மாத்ரே நமோ நம:
ஓம் புஷ்மமாலின்யை நமோ நம :
ஓம் புஷ்கரிண்யை நமோ நம :
ஓம் யஷ்டயே நமோ நம :
ஓம் பிங்களாயை நமோ நம :
ஓம் துஷ்டயே நமோ நம :---------------------------50
ஓம் ஸ்வர்ணாயை நமோ நம :
ஓம் ஹேம மாலின்யை நமோ நம :
ஓம் ஸுர்யாயை நமோ நம :
ஓம் ஸ்ரீ மஹா லஷ்ம்யை நமோ நம :---------------54
வறுமை நீங்கி ,செல்வ வளம் பெற்று ஆனந்தமாக வாழ மஹா லக்ஷ்மியின் இந்த நாமங்களை கொண்டு வழி பட நன்று .
:
வியாழன், 16 ஜூலை, 2015
அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட
அங்காரக ஸ்தோத்திரம்
கடன் தொல்லையை நீக்கி ,
வறுமையை அகற்றிட,
செவ்வாய் பகவானையும் ,
முருகப் பெருமானையும் வழிபட்டு மஹாலட்சுமியின் அருள் பெற்று வாழ
அங்காரக ஸ்தோத்திரம்
ஸ்ரீ ஸ்கந்த மஹா புராணத்தில் உள்ளது .
செவ்வாய் கிழமை வழிபட சிறப்பு .
ஸ்ரீ கணேசாய நம : 11
அங்காரக: சக்திதரோ
லோஹிதாங்கோ தராஸு த :1
குமாரோ மங்களோ பௌமோ
மஹாகாயோ தனப்ரத : 11
ருணஹர்த்தா த்ருஷ்டிகர்த்தா
ரோகக்ருத் ரோகநாசன: 1
வித்யுத்ப்ரபோ வ்ரணகர :
காமதோ தனஹருத் குஜ : 11
ஸாமகானப்ரியோ ரக்தவஸ்த்ரோ
ரக்தாய தேஷண : 1
லோஹிதோ ரக்தவர்ணஸ்ச்ச
ஸர்வகர்மாவபோதக: 11
ரக்தமால்யதரோ ஹேம குண்டலீ
க்ரஹநாயக: 1
நாமான்யேதானி பௌமஸ்ய ய :
படேத் ஸததம் நர : 11
ருணம் தஸ்ய ச தெளர்பாக்யம்
தாரித்ர்யம் ச வினச் யதி 1
தனம் ப்ராப்னோதி விபுலம்
ஸ்த்ரியம் சைவ மனோரமாம் 11
வம்சோத்த யோதகரம் புத்ரம்
லபதே நாத்ர ஸ்ம்சய : 1
யோர்சயேதஹினி பௌமஸ்ய
மங்களம் பஹீபு ஷ்பகை : 11
ஸர்வாநச்யந்தி பீடா ச தஸ்ய
க்ரஹக்ருதா த்ருவம்: 11
11 இதி ஸ்ரீ ஸ்காந்தபுராணே
அங்காரகஸ் தோத்ரம் ஸம்பூர்ணம்
குருவின் திருவருளுடன் செவ்வரளி பூகொண்டு முருகனையும் , அங்காரகனையும் ,மகாலட்சுமியையும் வணங்கினால் பலன் உண்டு
குருவின் அருள் உடன் அனைவரும் ஆனந்தமாய் வாழவும் .
செவ்வாய், 14 ஜூலை, 2015
Constipation மலச்சிக்கல் தீர
Constipation
மலச்சிக்கல் தீர :
பெரியவர்களுக்கு
பித்த மலச்சிக்கலை போக்க எலும்பிச்சம் பழச்சாறில் ,நல்லெண்ணெய் சமமாய் கலந்து சர்க்கரை சேர்த்து அதிகாலையில் அருந்தவும்
மலச்சிக்கல் தீரும் .
நிலாவரை பொடியை எலும்பிச்சம்பழம் பிழிந்த நீரை கொதிக்க வைத்து
கலந்தது குடிக்க நல்லது .
மற்றவர்கள் நிலாவரை பொடியை கொதிநீரில் கலந்து குடிக்க பலன் உண்டு
குழந்தைகளுக்கு கடின மலச்சிக்கலுக்கும் ,மலம் கழிக்க சிரமபடுவர்களுக்கும்
ஆலமரத்து இலை சிறிது எடுத்து கொதிக்க வைத்து இருத்து அதனுடன்
சுத்தமான விளக்கேண்ணேய் 30 மில்லி கொதி நீருக்கு 5 மில்லி அளவு எண்ணெய் சேர்த்து காலையில் /மாலையில் கொடுக்கவும் பலன் கிடைக்கும் .
வெள்ளி, 10 ஜூலை, 2015
வறுமையை போக்கிடும் தனலட்சுமியை வழிபடும் சோடச நாமாவளி
வறுமையை போக்கிடும் தனலட்சுமியை
வழிபடும் சோடச நாமாவளி :
ஓம் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ வித்யா லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ வீர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஜெய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சத் சந்தான லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தைர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தன லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தான்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சௌக்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ போக லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ மேதா லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சௌந்தர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தர்ம லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஆயுர் லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமியை நமோ நம :
மஹா லட்சுமியின் 16 பேறுகளுக்கான மேற்கண்ட ரூபங்களை உச்சரித்து
மலர்களை சமர்ப்பணம் செய்யலாம் .16 வகை மலர்களை வைத்து ஷோடச வழி பாடாக வழி பட்டால் மிக்க நன்று .
வியாழன், 9 ஜூலை, 2015
Throat Cancer medicine தொண்டை புற்று நோய் மருந்து
தொண்டை புற்று நோய் மருந்து :
குருவின் அனுகிரத்துடன் இதை தொடரவும்
நொச்சி இலை கற்பூரம் நோலா தரைத்தடக்கின்
அச்சமில்லை தாள்புற்றுக் காற்று ......
விளக்கம்
தினமும் காலையில் நொச்சி இலை சிறிதும் பூகற்பூரம் இரண்டையும் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள் வாயில் உமிழ்நீரில் அடக்கி 10 முதல் 30 நிமிடம் வரை வைத்து வந்தால் புற்று நோய் விலகும்
சனி, 13 ஜூன், 2015
Allergy அலர்சிக்கு வராமல் தடுக்க
அலர்சிக்கு வராமல் தடுக்க ;
மிளகொடு வேப்பிலை மென்றுஉண்ண யார்க்கும்
அளவி ஒவ்வாமைக்கு மாற்று ..........................குறள்
விளக்கம் :
ஒவ்வாமை எனப்படும் அலர்சிக்கு வராமல் தடுக்க தினமும் காலையில் அல்லது மாலையில் ஒருமுறை மிளகு முன்றும் ,வேப்பிலை ஐந்தும் மென்று தின்று வந்தால் அவர்களுக்கு எந்த விதமான நோயும் வராது .
மிளகொடு வேப்பிலை மென்றுஉண்ண யார்க்கும்
அளவி ஒவ்வாமைக்கு மாற்று ..........................குறள்
விளக்கம் :
ஒவ்வாமை எனப்படும் அலர்சிக்கு வராமல் தடுக்க தினமும் காலையில் அல்லது மாலையில் ஒருமுறை மிளகு முன்றும் ,வேப்பிலை ஐந்தும் மென்று தின்று வந்தால் அவர்களுக்கு எந்த விதமான நோயும் வராது .
Migraine Headache/grey hair தலை வலி தீர /இள நரை மாற
தலை வலி தீர /இள நரை மாற :
கரிசலை செம்மலர் தோன்றிநல் லெண்ணெய்
எரிகதிரின் ஏழ்நாள் தலைக்கு ..........................குறள்
விளக்கம் :
கரிசலாங்கண்ணி ,ரோசாப்பூவு ,மருதோன்றி இலை , நல்லெண்ணெய்
இவற்றை ஒரு பழைய மண் பாண்டத்தில் இட்டு வெள்ளை துணியால் வேடு கட்டி நல்ல வெய்யிலில் ஏழு நாள் வைத்து எடுத்து வடி கட்டி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால் தலை வலி தீரும் .
பொடுகு ,பூச்சி வெட்டு மறையும் .இள நரை மாறும் .
நல் லெண்ணெய் ----1 லிட்டர்
கரிசலாங்கண்ணி இலை , 100 கிராம்
ரோசாப்பூவு 100 கிராம்
,மருதோன்றி இலை 100 கிராம்
வியாழன், 4 ஜூன், 2015
புதன், 13 மே, 2015
கடுக்காய் பயன்கள் :
கடுக்காயின் மேல் தோலை மட்டுமே பயன் படுத்த வேண்டும் .
கடுக்காய் தூளை நெய் சேர்த்து ஒரு சிட்டிகை காலை நேரம் உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும் .மூல உபாதை குறையும்
தேனில் கடுக்காய் தூளை குழைத்து அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் ,வாய் புண் ஆறும் .
இருதய நோய் உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் அளவு பாலில் கலந்து இரவில் தொடர்ந்து அருந்தி வந்தால் நோய் குறையும் ..
புதன், 15 ஏப்ரல், 2015
சகஸ்ர சண்டி மஹா யாகம்
சகஸ்ர சண்டி மஹா யாகம்
(1000 சண்டி ஹோமம் )
மன்மத வருடம் ஆடி மாதம் 26ம் நாள் முதல் -29 நாள் முடிய --- 11.08.2015 முதல் 14.08.2015 முடிய மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரதியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மஹா யாகம் நடை பெற உள்ளது .
பல விதமான ஹோமங்கள் தினமும் நடை பெற உள்ளது
ஹோமங்களில் பங்கேற்க கலசங்கள் வேண்டுவோர் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
கோயில் :98428 58236,
சுந்தர் :9842916006,9865993238
(1000 சண்டி ஹோமம் )
மன்மத வருடம் ஆடி மாதம் 26ம் நாள் முதல் -29 நாள் முடிய --- 11.08.2015 முதல் 14.08.2015 முடிய மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரதியங்கிரா கோயிலில் சகஸ்ர சண்டி மஹா யாகம் நடை பெற உள்ளது .
பல விதமான ஹோமங்கள் தினமும் நடை பெற உள்ளது
ஹோமங்களில் பங்கேற்க கலசங்கள் வேண்டுவோர் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
கோயில் :98428 58236,
சுந்தர் :9842916006,9865993238
Medicine for piles-மூல நோய் தீர
piles medicine-மூல நோய் தீர :
பொது :
அனைத்து வகையான மூல நோய் உள்ளவர்களும் காலையில் வெறும் வயிற்றில் குப்பைமேனி தூள் பசும் நெய்யில் குழைத்து உண்டு வர நன்று
ரத்த மூலம் :
பசும் பாலில் வெள்ளை பூண்டை கொதிக்க வைத்து பயாசம் போல் செய்து அருந்தி வர ரத்த மூலம் ,நீரிழிவு நோய் குணமாகும்
ஒன்பது வகை மூலம் :
சுத்தி செய்த சேங்கொட்டை ,சுக்கு ,கடல்பாலை ,துத்தி இவற்றை சம எடை எடுத்து வெல்லம் சேர்த்து ஒரு கிராம் அளவு ஏழு நாள் காலை,மாலை உண்டு வர மூல நோய் ஒன்பதும் தீரும் பூரண குணமடைய தொடர்ந்து காலையில் உண்டு வர நன்கு நோய் குணமாகும் .
வெளில் பூசும் மருந்து :
துரிசு ,வெடியுப்பு ,கல் சுண்ணாம்பு இவற்றை நெய்யில் குழைத்து
மேல் பூச்சாக பூசிவர நோய் குணமாகும் .
உள் மூலம் குணமாக
;\பிரண்டை ,கற்றாழை சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் சம அளவு கடுக்காய் ,நீர் முள்ளி ,சுக்கு,பூண்டு ,மிளகு எடுத்து அரைத்து , இரண்டையும் சேர்த்தரைத்து அதில்
மூன்று கிராம் அளவு நன்றாக புளித்த மோரில் முன்று நாள் காலையில் உண்டு வர உள் மூலம் குணமாகும்
3 நாள் இடைவெளியில் மறுபடி இரு முறை அருந்தவும் நோய் முற்றிலும் குணமாகும் .
புதன், 8 ஏப்ரல், 2015
பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு: Menstrual problems
பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு: Menstrual problems
நிலப்பனை,பறங்கிச் சக்கை இவற்றை அவித்து இருத்து குடி நீராக குடித்து வர நன்மை .
கருஞ்சீரகம் ,சதக்குப்பை ,பெருங்காயம் சம அளவு பொடியாக்கி பனை வெல்லம் இட்டு பாகாக்கி உணவு உண்பதற்கு முன் காலை ,மாலை மூன்று நாள் மட்டும் கொடுத்து வந்தால் ருது வாகாத பெண் ருதுவாக்கும் .
சீரான மாத விடாய் இல்லாதவர்களும் அருந்தினால் சீராகும் .
செவ்வாய், 7 ஏப்ரல், 2015
திங்கள், 30 மார்ச், 2015
அரச மரம்---Ficus religiosa
அரச மரம் ;
பயன் தரும் பகுதிகள் :இலை ,பட்டை,வேர் ,விதை
பழம் ; இதில் சர்க்கரை,ப்ளோவனாய்ட் என்சைம் உள்ளது இது இதயத்திற்கு மிகவும் நல்லது ,ஆண்களுக்கு குழந்தை பேறு கிட்ட உதவும்
புல்லுருவி :
பெண்கள் அரச மரத்தில் வளர்ந்துள்ள புல்லுருவியின் இலைகளை அரைத்து மருத்துவர் ஆலோசனைபடி உண்டு வந்தால் குழந்தை உண்டாகும் (அருந்தும் முறையும் ,அளவும் நாடி பார்த்து மருத்துவர் கூறுவார் உங்கள் உடலுக்கு ஏற்ப ).
தொடரும்
பயன் தரும் பகுதிகள் :இலை ,பட்டை,வேர் ,விதை
பழம் ; இதில் சர்க்கரை,ப்ளோவனாய்ட் என்சைம் உள்ளது இது இதயத்திற்கு மிகவும் நல்லது ,ஆண்களுக்கு குழந்தை பேறு கிட்ட உதவும்
புல்லுருவி :
பெண்கள் அரச மரத்தில் வளர்ந்துள்ள புல்லுருவியின் இலைகளை அரைத்து மருத்துவர் ஆலோசனைபடி உண்டு வந்தால் குழந்தை உண்டாகும் (அருந்தும் முறையும் ,அளவும் நாடி பார்த்து மருத்துவர் கூறுவார் உங்கள் உடலுக்கு ஏற்ப ).
தொடரும்
புதன், 18 மார்ச், 2015
கீழாநெல்லி -2
கீழாநெல்லி --- பயன்கள்
தலை முடி உதிர்வதை தடுக்க
கீழாநெல்லிஇலையை பிழிந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும்
அரிப்பு,சொறி ,சிரங்கு தீர :
கீழாநெல்லி இலையை கல் உப்பு சேர்த்து அரைத்து பற்றாக் போட்டு நன்றாக காய்ந்த பிறகு கழுவி வந்தால் அரிப்பு,சொறி ,சிரங்கு தீரும் .
அல்சர் ,வாய் புண் ,நீரிழிவு தீர :
கீழாநெல்லி இலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு
தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் அளவு தண்ணீரில் அருந்திவர அல்சர் வாய் புண் ,நீரிழிவு நோய் தீரும்
தலை முடி உதிர்வதை தடுக்க
கீழாநெல்லிஇலையை பிழிந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும்
அரிப்பு,சொறி ,சிரங்கு தீர :
கீழாநெல்லி இலையை கல் உப்பு சேர்த்து அரைத்து பற்றாக் போட்டு நன்றாக காய்ந்த பிறகு கழுவி வந்தால் அரிப்பு,சொறி ,சிரங்கு தீரும் .
அல்சர் ,வாய் புண் ,நீரிழிவு தீர :
கீழாநெல்லி இலையை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு
தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் அளவு தண்ணீரில் அருந்திவர அல்சர் வாய் புண் ,நீரிழிவு நோய் தீரும்
செவ்வாய், 17 மார்ச், 2015
கீழா நெல்லி--மூலிகை ஒன்று பயன் பல -Phyllanthus fraternus webster
கீழா நெல்லி :
இதன் வேறு பெயர்கள் ----இளஞ்சியம் ,அவகதவாய் ,மாலினி,காமாலை நிவர்த்தி .
மூலிகை ஒன்று பயன் பல
மஞ்சள் காமாலை நோய்க்கு :--
கீழா நெல்லி இலை ,தும்பை இலை , மஞ்சள் கரிசலாங் கண்ணி இலை சம அளவு எடுத்து அரைத்து சுண்டைகாய் அளவு ஒரு டம்ளர் பசும் பாலில் கலந்து இரு வேளை குடித்து வர நாள் பட்ட மஞ்சள் காமாலை நோய்
தீரும் .
கல்லீரல் நோய்க்கு :
கீழா நெல்லியை வைத்து சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சுண்டைகாய் அளவு எலுமிச்சை பழ சாற்றில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும் ..
நீர் சுருக்கு தீர :--
கீழா நெல்லி இலை யை டைமண்ட் கல்கண்டு வைத்து மை போல் அரைத்து ஒரு வாரம் இரு வேளை அருந்திவர நீர் சுருக்கு தீர்ந்துவிடும்
தொடரும்
சனி, 28 பிப்ரவரி, 2015
சருமத்தில் வெள்ளை நிறம் மாற :
சருமத்தில் வெள்ளை நிறம் மாற :
சவுரிப் பழம் எண்ணெய் சீரகம்மேல் பூச்சாம்
சிவலிங்கம் வெண்தோல் நோய்க் குண் .................குறள்
விளக்கம் :
சவுரிப் பழமும் கருஞ்சீரகமும் சேர்த்து நல்லண்ணெயில் காய்ச்சி வடித்த தைலத்தை மேலுக்கு தடவி ஊறவைத்து பின் குளிக்கவும் இத்துடன் சிவலிங்கமாகிய இலிங்க செந்தூரத்தை தேனில் குழைத்து இரு வேளை உண்டுவர வெண் தோல் நோய் தீரும் .
அளவு :
இலிங்க செந்தூரம் ----ஒரு அரிசி எடை அளவு
சவுரி பழம் -----1 க்கு 100 கிராம் கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளவும்
செவ்வாய், 13 ஜனவரி, 2015
Aloe vera uses கற்றாழை மருத்துவ பயன்கள்
கற்றாழை மருத்துவ பயன்கள் :
மூல நோய்க்கு :
காய்ச்சிய பசும் பாலில்கற்றாழை தோல் சீவிய துண்டுகளை ஊற வைத்து துண்டை எடுத்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
ஆசனவாய் எரிச்சல் ,மூலச் சூடு ,சொறி தீரும் .
முகம் பளப்பளப்பாக மாறிட :
கற்றாழை சதையை எடுத்து முகத்தில் பூசி ஊற வைத்து பின்பு கழுவினால்
தோலில் உள்ள சுருக்கங்கள் மாறி பள பளப்பாகும் .
காயங்கள் ஆறுவதற்கு :
கற்றாழையை கீறி பிளந்து சதை பகுதியை காயத்தின் மீது வைத்து கட்டுப் போட வேண்டும் .காயம் ஆறும் வரை தினமும் இரு முறை செய்யவும்
ஒருமுறை மட்டுமே ஒரு துண்டைப் பயன்படுத்தவும் .
திங்கள், 12 ஜனவரி, 2015
பழனி பாதயாத்திரை காவடி பூஜை
அன்புடன் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி
பஞ்சமுகப்ரதியங்கிரா தேவி பக்தர்கள் சார்பாக காரைக்குடியில் 23.01.2015
வெள்ளிக்கிழமை காலையில் காவடி பூஜை நடை பெற உள்ளது
காலை 10 மணி முதல் பஜனை நடை பெரும் அதை தொடர்ந்து காவடி தீபாராதனை ,அன்னதானம் நடை பெரும்
நாள் 23.01.2015,வெள்ளிக்கிழமை
இடம் :
பெத்தா முருகப்ப செட்டியார் வீடு
81 மெ .மெ வீதி காரைக்குடி
வேண்டத்தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு உண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
அன்புடன் அனைவரும் நலம் பெற அழைக்கிறோம் அனைவரும் வருவீர் அருள் பெறுவீர்
தொடர்புக்கு: சுந்தர் -9842858236
வெள்ளி, 9 ஜனவரி, 2015
Aloe Vera- காய கல்ப கற்றாழை
கற்றாழை :
சித்தர்களின் காய கல்ப மூலிகைகளில் முதன்மையானது கற்றாழை
எளிதில் எங்கும் கிடைக்கும் சுலபமாக உபயோகப்படுத்தலாம் .
பயன் படுத்தும் விபரம் :
கற்றாழை ,சோற்றுக் கற்றாழை ,குமரி ,கன்னி என பல பெயர்கள் உண்டு
தேரையர் இதை பயன்படுத்தினால் இளமையாக வாழலாம் என குறிப்பிட்டுள்ளார் .
விஷ முறிவிற்கு :
உடலில் இருக்கும் எவ்விதமான விஷமானாலும்
கற்றாழையின் தோலை சீவி சதையை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் சம எடை நன்னாரி வேர் இவை இரண்டையும் கலந்து சாப்பிட்டால் விஷம் முறியும் .இதை சாப்பிட இயலாதவர் இதனுடன் கொஞ்சம் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடலாம் .
மூன்று நாள் உணவுக்குமுன் சாப்பிட்டால் நன்று .
அல்சருக்கு கை கண்ட மருந்து :
பல விதமான அல்சருக்கு உணவுக்கு முன் சிறிதளவு கற்றாழை சோறை எடுத்து சாப்பிட்டால் குணமாகும் .கசப்பின் காரணமாக சாப்பிட இயலாதவர் கற்றாழை ஜூஸ் வாங்கி 30 மில்லி தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .
தீப்புண் ஆருவதற்கு :
சமையல் செய்யும் போது ஏற்படும் தீப்புண்களுக்கு
மேல் பூச்சாக பூசி வந்தால் புண் விரைவில் ஆறும் .
தலைமுடி நன்கு வளர :
100 கிராம் கற்றாழை சோறை 500 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டுவது நின்று நன்கு வளரும் ,தலை,கண் குளிர்ச்சியடையும் .
சனி, 3 ஜனவரி, 2015
medicine for ladies பெண்ணுக்கு கருவுற மருந்து
medicine for ladies பெண்ணுக்கு கருவுற மருந்து
கடலைவேர் தோடை குறிஞ்சான் எருக்கு ,
விடல் பிரண்டை பெண்மலட்டின் மாற்று . குறள்
கடலை வேர் ,ஆடாதோடை வேர் ,சிறு குறிஞ்சான் வேர் எருக்கு வேர் ,பிரண்டை இவை சேர்த்து அரைத்துப் பழமளவு நிராடிய மூன்று நாளும் உண்டு வர பெண் மலடாக இருந்தாலும் அது நிவர்த்தியாகும் .
பொதுவாக வித்தில் குற்றமின்றி விதைக்கும் நிலம் போன்ற பெண்ணால் குறையில்லை
குறை தீர ஆண்மகன் மருந்துன்ன வேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)