Powered By Blogger

சனி, 27 ஜூன், 2020

உப்பு நீர் குறைய Creatine level reducer




உப்பு நீர் குறைய 
Creatine  level  reducer 

செப்பு நெருஞ்சில் சிறுநீர்  மிகுவெப்பத்
துப்பை  குறைக்கும்  மருந்து ..................குறள் 



விளக்கம் 

செப்பு நெருஞ்சில்  எனும் சிறு நெருஞ்சில் செடியை  நுண் தூளை 
காலை மாலை கொதிநீரில்  உண்டு வர  சிறுநீரில் மிகுந்த உப்பையும் உடல் சூட்டையும்  குறைக்கும் ..Creatin  அளவும் குறையும் ..

வியாழன், 25 ஜூன், 2020

மூல நோய் வராமல் தடுக்க .....



மூல  நோய்  வராமல் தடுக்க 

    உப்பு பிரண்டை  உயர் புடப்  பற்பமுடன் 
செப்பு நீர்  மோர்க்குடற்புண்  ஆற்று ..
......                                                                                                           .குறள் 

                                              விளக்கம்   
                            பிரண்டையை கணு நீக்கி எடுத்துக்கொள்ளவும் .அதற்கு சரிசமமாக  கல் உப்பு சேர்த்து  இடித்து  நன்றாக வெயிலில்  காய வைக்கவும் 
பிறகு  அதை புடமிட்டு எடுத்தால் அது ஈரமற்ற  சாம்பலாக இருக்கும்
 (பசும் சாண ராட்டியில் வைத்து பஸ்பமாக்கி  .).அதை சாதம்  வடித்த வடிநீரிலோ ,மோரிலோ 
இரண்டு கிராம் அளவு  சேர்த்து அருந்திவர  குடல் சுத்தமாகும் ,மூலம் முற்றிலும் குணமாகும் .



தேவையான பொருட்கள் 

பிரண்டை 
கல் உப்பு 
பஸ்பமிட  விராட்டி 

புதன், 3 ஜூன், 2020

ஈரல் நோய் குணமடைய LIVER Disease cure



                                                           ஈரல்  நோய்  குணமடைய 


வல்லாரை  நெய் விட்டு  வாதுமையும்  கூட்டிவுணின் 
கல்லிரல்   வன்மையுறுங்  காண்                              ..........குறள் 

விளக்கம் 



வல்லாரை கீரையை  காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு 
வாதுமை பருப்பை பொடி செய்து சம அளவு எடுத்து  பசு நெய் விட்டு 
காலை மாலை  உண்டு வர கல்லிரல்  பலம் பெரும்  நோய்  வராது