Powered By Blogger

திங்கள், 30 மார்ச், 2015

அரச மரம்---Ficus religiosa

அரச மரம் ;
பயன் தரும்  பகுதிகள்  :இலை ,பட்டை,வேர் ,விதை

பழம் ; இதில் சர்க்கரை,ப்ளோவனாய்ட்  என்சைம்  உள்ளது  இது இதயத்திற்கு மிகவும்  நல்லது ,ஆண்களுக்கு  குழந்தை பேறு  கிட்ட  உதவும்

புல்லுருவி :
 பெண்கள்  அரச மரத்தில் வளர்ந்துள்ள புல்லுருவியின்  இலைகளை  அரைத்து மருத்துவர்  ஆலோசனைபடி  உண்டு வந்தால்  குழந்தை  உண்டாகும்  (அருந்தும் முறையும் ,அளவும்  நாடி பார்த்து மருத்துவர்  கூறுவார்  உங்கள் உடலுக்கு ஏற்ப ).

தொடரும்







புதன், 18 மார்ச், 2015

கீழாநெல்லி -2

கீழாநெல்லி --- பயன்கள்

தலை முடி உதிர்வதை தடுக்க


கீழாநெல்லிஇலையை பிழிந்து சாறு எடுத்து  தலையில் தேய்த்து  ஊற  வைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது  நின்று விடும்

அரிப்பு,சொறி ,சிரங்கு  தீர :
கீழாநெல்லி  இலையை  கல்  உப்பு சேர்த்து அரைத்து  பற்றாக்  போட்டு நன்றாக  காய்ந்த பிறகு கழுவி வந்தால் அரிப்பு,சொறி ,சிரங்கு தீரும் .

அல்சர் ,வாய்  புண் ,நீரிழிவு  தீர :

கீழாநெல்லி இலையை  காய  வைத்து  பொடி  செய்து  வைத்துக்  கொண்டு
தினமும்  காலையில் ஒரு நெல்லிக்காய் அளவு தண்ணீரில்  அருந்திவர  அல்சர்  வாய் புண் ,நீரிழிவு  நோய்  தீரும்





செவ்வாய், 17 மார்ச், 2015

கீழா நெல்லி--மூலிகை ஒன்று பயன் பல -Phyllanthus fraternus webster

கீழா நெல்லி :


இதன்  வேறு  பெயர்கள்  ----இளஞ்சியம் ,அவகதவாய் ,மாலினி,காமாலை நிவர்த்தி .

மூலிகை ஒன்று பயன் பல

மஞ்சள் காமாலை நோய்க்கு :--

கீழா நெல்லி இலை ,தும்பை இலை , மஞ்சள் கரிசலாங் கண்ணி  இலை சம  அளவு  எடுத்து அரைத்து சுண்டைகாய் அளவு  ஒரு டம்ளர்  பசும் பாலில்  கலந்து  இரு வேளை  குடித்து வர நாள் பட்ட மஞ்சள் காமாலை  நோய்
தீரும் .

கல்லீரல்  நோய்க்கு :

கீழா நெல்லியை  வைத்து  சிறிது சீரகம்  சேர்த்து அரைத்து  சுண்டைகாய்  அளவு  எலுமிச்சை  பழ  சாற்றில்  சேர்த்து  பருகி வர  கல்லீரல்  கோளாறு  குணமாகும் ..

நீர் சுருக்கு  தீர :--

கீழா நெல்லி  இலை யை  டைமண்ட்  கல்கண்டு  வைத்து  மை  போல் அரைத்து  ஒரு  வாரம் இரு வேளை  அருந்திவர  நீர் சுருக்கு  தீர்ந்துவிடும்

தொடரும்