Powered By Blogger

செவ்வாய், 21 ஜூன், 2016

பெண்கள் கருவுற :

பெண்கள்  கருவுற :


கடலை வேர்  தோடை குறிஞ்சான் எருக்கு
விடல் பிரண்டை  பெண்மலடின்   மாற்று        ----குறள்


விளக்கம்

நீண்ட நாள்களாக  கருவுறாமல் இருந்தவர்கள்மட்டும்  இதை  குருவின் அருள் துணை கொண்டு  உபயோகிக்கவும் .

கடலை செடியின் வேர் ,ஆடாதோடை வேர் ,சிறுகுறிஞ்சான் வேர் ,எருக்கு வேர் . பிரண்டை  இவை சேர்த்து அரைத்து  நெல்லி காய் அளவு  எடுத்து நீராடிய பிறகு மூன்று நாளும் உண்டு வர பெண் மலடாக  இருந்தாலும்  அது நிவர்த்தியாகும் .



வெள்ளி, 3 ஜூன், 2016

குடற் பூச்சீ நீக்கம்






குடற் பூச்சீ நீக்கம் 
;



எளிய முறையில் நமது வயிற்றை  சுத்தம் செய்து கொள்ள வழி  இதை மாதம் ஒருமுறை  செய்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள்  நீங்கி சுத்தமாகும் 

கடுக்காய் ,வேப்பை  ஈர்க்கு ,பிரண்டை இம்மூன்ரையும் எடுத்து  நன்றாக  கொதிக்க வைத்து வடிகட்டி  காலை,மாலையில்  அருந்தினால்  குடல்  சுத்தமாகும் .
அளவு ; கடுக்காய்  1
                வேப்பை  ,ஈர்க்கு   2 பங்கு 
                பிரண்டை   1 பங்கு