Powered By Blogger

ஞாயிறு, 16 நவம்பர், 2014

Food Delivery for oldage people at Karaikudi: காரைக்குடியில் முதியோருக்கு உணவு

                                                                                                      

                       
















                         

                                                                                 உ
                                                                          சிவமயம்
                                                               தர்மோ  ரக்ஷதி ரக்ஷித

                                                                    அன்புடன் உலக
                                        மக்கள் அனைவரும் ஆனந்தமாக  வாழ  வேண்டி

   தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லா  உலகினை  உருவாக்குவோம்

காரைக்குடியில் முதியோருக்கு உணவு



ஆன்மீகப் பெரு மக்களே  உங்களின் ஆதரவு  வேண்டி

காரைக்குடியில் இருக்கும் முதியோர் ,ஆதரவு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேவை செய்ய ஆதரவு அளிக்க ,மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்ச முக  ப்ரதியங்கிரா  கோயில் பக்கதர்கள் மானாமதுரை  சாமி அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவர்கள் இருக்கும் இடத்திலேயே பக்குவமாய்  சமைத்திட்ட  உணவை  கொண்டு போய் கொடுத்து  பசி ஆற வைக்க முயற்சிக்கிறார்கள்

நகரின் மையப் பகுதியில் ,நல்ல திறமை வாய்ந்த சமையல் ஆள்களைக் கொண்டு சமைத்து பதிவு செய்த முதியோர்களுக்கு தினமும்  3வேளையும்
குறித்த நேரத்தில் உணவை கொண்டு போய் கொடுக்க இருக்கிறார்கள்

வசதி உள்ள முதியவர்கள் கட்டணம் செலுத்தலாம் ,பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பெறலாம்.

வசதி இல்லாதவர்களுக்கு உறவினர் /தெரிந்தவர்  பரிந்துரையின் பேரில் இலவசமாக  அளிக்கப்படும் ,இதற்காக அவர்கள் இரண்டு டிப்பன் கேரியர்கள்
வாங்கி எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் ,

காலை,மதியம்,இரவு  உணவு உங்கள் இடம் வந்து சேரும் இப்போது இவ் வசதி காரைக்குடியில் அறிமுகம்செய்ய நினைக்கிறார்கள் .

இதற்க்கான  இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது ,மாருதி ஓம்னி வேன்  தேவைபடுகிறது அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது
சேவை மனப்பான்மையுடன்  வேன்  ஓட்டுவதற்கு  டிரைவர்கள்  தேவை தங்கும் இடம்,உணவு  கட்டணம் இல்லை .

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் வீட்டுடன் ,காலி இடமும் இருந்தால் தெரியப்படுத்தவும் ,அதற்குண்டான வாடகையையும் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு :
திரு.முத்துராமலிங்கம் ,9443417289
சுந்தர் ;9842858236
நா.நாச்சியப்பன் ;9486651700
அண்ணாமலை ;9840424292,9442559844
சீனிவாசன் :9894087796




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக